Banner

தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டது தமிழ் மொழி. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த கலைச்சொற்களையும் பல்துறை சார்ந்த கலைச்சொற்களையும் தமிழ்ப்படுத்துதலும் தமிழிலேயே பயன்படுத்துதலும் தேவையாக உள்ளது. இது தமிழின் வளமைக்கும் செழுமைக்கும் பங்களிப்பதோடு, நவீனகாலத் தமிழ் மொழியின் இயங்குமுறைக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பாக அமையும். அதன்படி, தொடர்ந்து பல்துறை சார்ந்த ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்கள் இப்பகுதியில் வெளியிடப்படும்.